முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வேலை நிறுத்தமா? சுமுக உடன்பாடா? போக்குவரத்து ஊழியர்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை

வேலை நிறுத்தமா? சுமுக உடன்பாடா? போக்குவரத்து ஊழியர்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் உடனடியாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

  • Last Updated :

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 14-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. இதில், ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாவிட்டால், உடனடியாக வேலைநிறுத்தம் தொடங்கும் என்று தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதிசெய்வது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து கழக தொழிற் சங்கத்தினர், வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கினர். இதனைத் தொடர்ந்து, ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை, சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில் இன்று நடைபெற உள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 66 தொழிற்சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர். இநத பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் உடனடியாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தேர்தல் வாக்குறுதிப்படி விலை குறைப்பு: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பிடிஆர் பதிலடி!

ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று தீர்வு கண்டு வேலைநிறுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்று போக்குவரத்து ஊழியர் சங்கம் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளது.

top videos
    First published:

    Tags: Bus Strike, Tamil Nadu government, Transport workers