தமிழகத்தில் இருந்து கர்நாடக ,ஆந்திர மாநிலங்களுக்கு நான்கு மாதங்களுக்கு பிறகு பொது போக்குவரத்து தொடங்கியதுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன்டி, ஏறக்குறைய நான்கு மாதங்களுக்கு பின்னர் தியேட்டர்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள், நீச்சல்குளங்கள் (விளையாட்டு பயிற்சிக்கு மட்டும்), தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் பார்கள் போன்றவையும் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.
இதுவரை கடற்கரைகளில் நடைபயிற்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முழு அனுமதி தரப்பட்டிருக்கிறது தமிழகத்திலிருந்து கர்நாடாகா, ஆந்திராவிற்கு பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டது.
Also Read : தமிழகத்தில் தியேட்டர்கள், பூங்காக்கள் இன்று முதல் திறப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி
இதையடுத்து தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு பொது போக்குவரத்து சேவை தொடங்கியது.
கர்நாடக மாநிலத்திற்க்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து பெங்களூரு, கோலார் ,சிவமோக உள்ளிட்ட பகுதிகளுக்கு முதற்கட்டமாக 200 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதே போல் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்க்கு வெவ்வேறு பகுதிகளில் இருந்து 250 பேருந்துகள் தமிழகத்திற்க்கு இயக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர்,குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கபடுகிறது. நான்கு மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.