அரசு அதிகாரிகள் அதிக சம்பளம் கேட்பதால் பால் விலை, பேருந்து கட்டணத்தில் சிறிதளவு மாற்றம் இருக்கும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு காலகட்டத்திலும் பொருளாதார ரீதியாக ஏற்றம் பெறும் போது மக்கள் அதை சந்திக்கிறார்கள். இது வேண்டுமென்றே திணிப்பதல்ல.
தனியார் பால் கொள்முதல் செய்யும் போது அவர்களுக்கு கட்டுப்படியாகாத காரணத்தால் விலையேற்றம் வேண்டும் என்கிறார்கள். அரசு அதிகாரிகள் அதிக சம்பளம் கேட்பதால் பால் விலை, பேருந்து கட்டணத்தில் சிறிதளவு மாற்றம் இருக்கும். அரசு எவ்வளவு மானியம் கொடுத்தாலும் செலவை ஈடுக்கட்ட முடியாது. அதிமுக ஆட்சியில் விலையை ஏற்றவில்லையா?
இதையும் படிங்க - 2 நாள் பயணமாக ஏப்.1ல் டெல்லி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பால் விலை, பேருந்து கட்டணம் மாற்றம் குறித்து முதல்வர் முடிவெடுத்து அறிவிப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், முதலமைச்சர் முதலீட்டாளர்களை ஈர்க்கவே துபாய் சென்றுள்ளார். மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு அனைத்து வகைகளிலும் முதன்மை மாநிலம் என்பதை காட்டி, முதலீட்டாளர்களை ஈர்க்க அவர் துபாய் சென்றுள்ளார்.
அதை எதிர்க்கட்சிகள் கொச்சைப்படுத்தி வருகின்றனர். அதிமுகவும், பாஜகவும் தான் இதை தொடர்ந்து செய்கின்றன. அவர்கள் பேசுவதற்கு வேறு பொருளே கிடைப்பதில்லை. யார் அதிகம் திமுகவை திட்டுவது? என்பதில் அதிமுகவினருக்கும், அண்ணாமலைக்கும் இடையே போட்டி நடக்கிறது.
இதையும் படிங்க - 12அடி நீள ராஜ நாகத்தை அலேக்காக தட்டித் தூக்கிய வாவா சுரேஷ்
எங்கள் மீது குற்றம் சுமத்தவில்லையென்றால், அண்ணாமலையால் கட்சியை நடத்த முடியாது. யார் விமர்சனம் கூறினாலும் மக்கள் திமுக பக்கமே உள்ளனர்
அரசை பொறுத்தவரை தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை முதலமைச்சர் படிப்படியாக செய்து வருகிறார்.
என்று அவர் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.