கொடைக்கானலில் பேருந்து சேவை தொடங்கவில்லை: அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் மலைவாழ் மக்கள் அவதி

கோப்புப்படம்

 • Share this:
  கொடைக்கானலில் பேருந்து சேவை தொடங்காததால் அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்க முடியாமல் மலைவாழ் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

  கொரோனா தொற்றே இல்லாத கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், ஊரடங்குக்கு முன்னர் அத்தியாவசியப் பொருட்களை வாங்க பல கிலோ மீட்டர் தொலைவு பயணத்துக்கு பேருந்துகளில் சென்று வந்தனர். தற்போது ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு மற்ற பகுதிகளில் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.

  இந்நிலையில், கொடைக்கானலில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், அத்தியாவசியப் பொருட்கள் கூட வாங்க செல்ல முடியவில்லை என மலைவாழ் மக்கள் கவலை தெரிவித்தனர்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
  Also see:

   
  Published by:Rizwan
  First published: