Home » News » Tamil-nadu » BUS DRIVERS PROTEST FOR SALARY CUT RIZ VEL

சம்பளப் பிடித்தத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தும் போக்குவரத்து ஊழியர்கள்

போக்குவரத்து ஊழியர்களின் சம்பளப் பிடித்தத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

சம்பளப் பிடித்தத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தும் போக்குவரத்து ஊழியர்கள்
போக்குவரத்து ஊழியர்களின் சம்பளப் பிடித்தத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியுள்ளனர்.
  • Share this:
சம்பளம் வழங்குவது தொடர்பான பிரச்னை காரணமாக கடந்த 60 நாட்களாக 50% மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வராமல் இருக்கின்றனர். அவர்களுக்கான சம்பளத்தை முறையாக வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் சம்பளம் முழுமையாக வந்த நிலையில், இந்த மாதச் சம்பளம் 2,000 ரூபாயிலிருந்து 12,000 வரை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விளக்கத்தை போக்குவரத்து ஊழியர்கள் துறைசார்ந்த அதிகாரிகளிடம் கேட்டபோது, கடந்த ஆண்டு விடுமுறை நாட்களைக் கணக்கெடுத்து அதற்கேற்ப உங்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

இதனால் குழப்பமடைந்த போக்குவரத்து ஊழியர்கள் தங்களுக்கு முறையான விளக்கம் தர வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால், சரியான விளக்கம் கிடைக்காததால் போக்குவரத்து ஊழியர்கள் இன்று தமிழகம் முழுவதும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு விடுமுறையைக் கணக்கில் எடுத்து இந்த மாதச் சம்பளத்தை பிடிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என அவர்கள் கேள்வியை எழுப்பியுள்ளனர்.


தங்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை உடனடியாகத் திருப்பித் தர வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய பணிமனை முன்பு உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.










Also see:
First published: May 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading