கனிவான வார்த்தைகளால் பயணிகளைக் கவரும் அரசுப் பேருந்து நடத்துநர் சிவசண்முகம்

பயணத்தை இனிமையாக்கும் அரசுப் பேருந்து நடத்துநர் சிவசண்முகம், "மக்களுக்கு சேவை செய்வது மனநிறைவு தருகிறது" என கூறியுள்ளார்.

Web Desk | news18
Updated: January 13, 2019, 12:02 PM IST
கனிவான வார்த்தைகளால் பயணிகளைக் கவரும் அரசுப் பேருந்து நடத்துநர் சிவசண்முகம்
சிவ சண்முகம்
Web Desk | news18
Updated: January 13, 2019, 12:02 PM IST
அரசுப் பேருந்தில் பயணிகளுக்கு இனிமையான பயணம் அமைய வேண்டும் என்ற எண்ணத்தில், கோவையில் பேருந்து நடத்துநர் ஒருவர், தனது கனிவான வார்த்தைகளால் பயணிகளை கவர்ந்து வருகிறார். இவரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவையை அடுத்த பேரூர் ராமசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசண்முகம். இவர், கடந்த 23 ஆண்டுகளாக  அரசுப் பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார். கோவை- மதுரை பேருந்து வழித்தடத்தில்  நடத்துனராக உள்ள சிவசண்முகத்துக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதற்கு காரணம், ஒவ்வொரு பயணிகளின் பயணமும் இனிமையானதாக இருக்க வேண்டும் என்ற அவரின் எண்ணம்தான்.

பயணிகள் பேருந்துக்குள் வரும்போது அனைவருக்கும் வாழ்த்து கூறி பயணத்தை தொடங்கி வைக்கும் சிவசண்முகம், பயணத்தின்போது அசெளகரியம் ஏற்பட்டால் தெரிவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கிறார். பயணிகள் மத்தியில் இவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தனது பணியை மக்களுக்கு செய்யும் சேவையாக கருதுவதால், மனநிறைவு கிடைப்பதாக நடத்துனர் சிவசண்முகம் கூறுகிறார்.

பயணத்தை இனிமையாக்கும் பேருந்து நடத்துநர் சிவசண்முகம்


தனது சேவையால், பயணிகள் தன்னிடம் இனிமையாக நடந்து கொள்வதுடன்,செல்பி எடுத்துக் கொள்வதாகவும் சிவசண்முகம் நெகிழ்கிறார். ஒவ்வொருவரும் தாங்கள் செய்யும் பணியை நேசித்து செய்தால், அந்தச் சேவை மற்றவர்களுக்கும் இனிமையானதாக இருக்கும் என்பதை இவரின் சேவை உணர்த்துகிறது. அதோடு, அனைத்து நடத்துனர்களுக்கும் வழிகாட்டியாக சிவசண்முகம் திகழ்கிறார்.

சில்லறை கொடுப்பதற்கே முறைத்துக் கொள்ளும் சில நடத்துனர்கள் மத்தியில், பேருந்து புறப்படும்போது ஒவ்வொரு முறையும் பயணம் இனிதாக அமைய வாழ்த்துகளை கூறும் கோவை நடத்துனரை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அழைத்து கவரவித்துள்ளனர்.

Also see... பொங்கல் பண்டிகை... மல்லிகைப் பூ கிலோ ரூ.3,000
Loading...
First published: January 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...