ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜல்லிக்கட்டில் சீறிப்பாய தேனியில் தயாராகி வரும் காளைகள்!

ஜல்லிக்கட்டில் சீறிப்பாய தேனியில் தயாராகி வரும் காளைகள்!

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

தாங்கள் வளர்த்த காளைகளை பொங்கல் பண்டிகையை ஒட்டி, களத்தில் இறங்கி விளையாட உள்ளதை காண இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் .

  • News18
  • 1 minute read
  • Last Updated :

பொங்கல் பண்டிகை நெருங்க உள்ள நிலையில் தேனியில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக காளைகள் தீவிரமாக தயார் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் பட்டதாரி இளைஞர்கள் காளைகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொங்கல் பண்டிகை என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு தான். அதிலும் ஜல்லிகட்டு போட்டிகள் தடை செய்யப்பட்டு, அதற்காக தமிழகம் தழுவிய போராட்டம் நடைபெற்று தடை நீக்கப்பட்ட பிறகு ஜல்லிக்கட்டு மீதான ஆர்வம் இன்னும் அதிகரித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு காளைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

ஜல்லிக்கட்டு - கோப்புப் படம்

பொங்கல் பண்டிகையின் போது தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டி, அய்யம்பட்டி ஆகிய பகுதிகளில் ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.

இதற்காக ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளான திம்மரச நாயக்கனூர், பாலக்கோம்பை, குன்னூர், ஏத்தக் கோவில், ராஜகோபாலன் பட்டி மற்றும் அல்லிநகரம் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு காளைகளை தயார் படுத்துவதில் பட்டதாரி இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தேனி மவாட்டத்தில் காங்கேயம் காளை, தேனி மலை மாடு உள்பட 8 வகையான ஜல்லிக்கட்டு காளைகள் இப்பகுதியில் வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்தக் காளைகளுக்கு தற்போது தீவிரமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தினமும் காலையும், மாலையும் நடைப்பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் மண் மேட்டில் கொம்பால் முட்டவைத்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதே போல், காளைகளுக்கு பருத்தி விதை, தவுடு, சோளம், அரிசிமாவு, பேரிச்சம் பழம், போன்ற சத்தான உணவுகளும் வழங்கப்படுகிறது. இதோடு நீச்சல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தாங்கள் வளர்த்த காளைகளை பொங்கல் பண்டிகையை ஒட்டி களத்தில் இறங்கி விளையாட உள்ளதை காண இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் .

Also see... டூ-வீலர் பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்!

Published by:Vaijayanthi S
First published:

Tags: Jallikattu protest, Lok Sabha Key Constituency, Theni