• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் முரட்டுக் காளைகள்!

ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் முரட்டுக் காளைகள்!

உரிமையாளர்கள் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்

உரிமையாளர்கள் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்

3 கிலோ மீட்டர் தூரம் நடை பயிற்சி, ஆழமான குளத்தில் நீச்சல் பயிற்சி, 5-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி காளைக்கு பாய்ச்சல் பயிற்சியும் அளித்து வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தயாராகும் காளைகளுக்கு அவற்றின் உரிமையாளர்கள் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்.

தமிழரின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருவிழாவையொட்டி பெரும்பாலான இடங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு பிடித்தல் என நிகழ்ச்சிகள் களைகட்டும். அந்தவரிசையில், இந்தாண்டு களைகட்டவிருக்கும் ஜல்லிக்கட்டுப்போட்டிக்கு காளைகளை தயார்படுத்தி வருகின்றனர் காளையர்கள்.

அறந்தாங்கி அருகே உள்ளது களப்பக்காடு என்ற கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஆலமரத்து முனீஸ்வரர் கோவிலில் தைத்திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு பிடிக்கும் விழா நடைபெறுவது வழக்கம்.

இந்தாண்டு நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக, அப்பகுதிகளில் வளர்க்கப்படும் காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர். பயிற்சி பெற்ற காளைகளுடன் பல்வேறு பகுதிகளில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்று வருவதாக கூறுகின்றனர்.

3 கிலோ மீட்டர் தூரம் நடை பயிற்சி, ஆழமான குளத்தில் நீச்சல் பயிற்சி, 5-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி காளைக்கு பாய்ச்சல் பயிற்சியும் அளித்து வருகின்றனர்.

உணவாக பேரிச்சம்பழம், பாதாம், முட்டை, பால், பருத்தி விதை என சத்தான உணவு வகைகள் மற்றும் இயற்கை மருந்ததாக முடக்கத்தான் இலை, பெருமருந்து கண்டங்கத்திரி காய்கள் போன்றவற்றையும் கொடுக்கின்றனர். இதற்காக, தினந்தோறும் சுமார் 300 முதல் 500 ரூபாய் வரையிலும் செலவு செய்வதாக, காளை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

மண்ணின் மாண்பையும், மரபின் வீரியத்தையும் எடுத்துக்காட்டும் விதமாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப்போட்டியில், இந்த பயிற்சிக்காளைகள் துள்ளிக்கிட்டு ஓடும். அவற்றை வீரத்துடன் அடக்கி பரிசுகளை வெல்லும் நம்பிக்கையில் உள்ளனர் காளையர்கள்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: