• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • முந்தைய ஆட்சியில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய நிதியில் முறைகேடு!

முந்தைய ஆட்சியில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய நிதியில் முறைகேடு!

முறைகேடு

முறைகேடு

கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய நிதியை தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் அந்த நிதியை பயன்படுத்து அலுவலகம் கட்டப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு செலவிடுவதற்காக ஏற்படுத்தப்பட்ட தொழிலாளர் நல வாரிய நிதியை முறைகேடாக பயன்படுத்தி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாடு கட்டுமான நல வாரிய நிதியை  விதிகளை மீறி பயன்படுத்தி   தொழிலாளர் நல துறை அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் மாநிலம் முழுவதும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய நிதி 54 கோடி ரூபாய் பயன்படுத்தி தமிழகம் முழுவதும் 19 மாவட்டங்களில் கடந்த 2017 முதல் 2020 வரை தொழிலாளர் நலத்துறை அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விவகாரம் குறித்து சிஏஜி அறிக்கையில் வெளிவந்ததை அடுத்து மாநிலம் முழுவதும் இது குறித்தான விசாரணைக்கு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் உத்தரவிட்டுள்ளார். கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய நிதியை தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். கல்வி, பிரசவம்,  விபத்து, இறப்பு ஆகியவற்றுக்காக இந்த நிதியிலிருந்து உதவி தொகை வழங்கப்படும்.  கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் திட்ட மதிப்பீட்டில் ஒரு குறிப்பிட்ட தொகையை தொழிலாளர்கள் நல வாரியத்திற்கு வழங்குவதன் மூலம் இந்த நிதி திரட்டப்படுகிறது.

பொன்குமார்


இதுகுறித்து கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தலைவர் பொன்குமார் கூறுகையில், உச்சநீதிமன்ற விதிகளுக்கு புறம்பாக நலவாரிய நிதி அலுவலக கட்டிடங்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் கட்டிடங்கள் சொந்தமாக நிலம் வாங்கி கட்டப்படவில்லை. யாருக்கோ சொந்தமான இடத்தில் நல வாரியத்திற்கு பலன் அளிக்காத வகையில் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய இந்த நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்தான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த விதிமீறலுக்கு முன்னாள் தொழில் துறை அமைச்சரும் முதலமைச்சரும்தான் காரணம் என குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க:சினிமா பாணியில் கொள்ளை; ரூ.6 கோடி மதிப்பிலான செல்போன்களை தூக்கி சென்ற கொள்ளையர்கள்!


இந்த விவகாரம் குறித்து இந்திய தணிக்கை அறிக்கையில், தொழிலாளர்கள் நலவாரிய நிதியிலிருந்து தொழிலாளர்கள் நல துறை மாவட்ட அலுவலகங்கள்  கட்ட 2013இல் அரசு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது எனவும் இதற்கான நிதி 2015 முதல் 2017 வரை பொதுப்பணித் துறைக்கு நான்கு தவணைகளில் 44 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்தான தொழிலாளர்கள் நல வாரியத்தின் முதல்கட்ட விசாரணையில், இந்த கட்டிடங்கள் அரசு தொழிற்பயிற்சி மையங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் வளாகங்களில் 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை கட்டப்பட்டது தெரியவந்துள்ளது. இதற்காக 54.4 8 கோடி ரூபாய் நலவாரிய நிதியிலிருந்து செலவிடப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க: மக்களை தேடி மருத்துவம்: நேற்றுவரை பலன் பெற்றவர்கள் எத்தனை பேர்?


இதுகுறித்து முன்னாள் தொழில்துறை அமைச்சர் நிலோபர் கபில் இடம் பேசியபோது, " கட்டுமான தொழிலாளர்களுக்கான விடுதி மட்டுமே நல வாரிய நிதியிலிருந்து கட்டப்பட்டது, அலுவலகங்கள்கட்டியதாக கூறுவது பொய்யான தகவல், விசாரணை செய்து நிரூபிக்கட்டும்" என்றார். பின்பு தணிக்கை அறிக்கையில் எப்படி விதிமீறல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என கேட்டதற்கு நிதி குறித்து முடிவு எடுப்பது தான் இல்லை, எனவே தனக்கு தெரியாது எனவும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: