அடிப்படை வசதிகள் இருந்தால் மட்டுமே இனி கட்டடம் கட்ட அனுமதி- தமிழக அரசு

தமிழக அரசு

குடிநீர், சாலை, மழைநீர் வடிகால் மற்றும் விளக்குகளுக்கான கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் உள்ளாட்சி அமைப்புகளிடம் கட்ட வேண்டும். அனைத்தும் இருப்பது உறுதியானால் மட்டுமே கட்டடம் கட்ட அனுமதி கொடுக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 • Share this:
  அடிப்படை வசதிகள் இருந்தால் மட்டுமே இனி கட்டடம் கட்ட அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

  மனைப்பிரிவில் சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடம் தவிர, 10 சதவிகித இடத்தை பொழுதுபோக்கிற்கும், 1 சதவிகித இடத்தை பொது பயன்பாட்டிற்கும், 0.5 சதவிகித இடத்தை மின்சார வாரியத்திற்கும் வழங்க வேண்டும். 2019 முதல் நடைமுறையில் உள்ள இந்த விதிகளில் மனைப்பிரிவுக்கு அனுமதி பெறும் நடைமுறையை எளிமைப்படுத்துமாறு கிரெடாய் அமைப்பினர் கோரிக்கை வைத்திருந்தனர்.

  அதனடிப்படையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கட்டடம் கட்ட அனுமதி கேட்கும் மனைப்பிரிவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அங்கு சாலை, திறந்தவெளி பகுதி உள்ளிட்டவை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து அதற்கான ஆவணங்களை உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்.

  குடி தண்ணீர், சாலை, மழைநீர் வடிகால் மற்றும் விளக்குகளுக்கான கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் உள்ளாட்சி அமைப்புகளிடம் கட்ட வேண்டும். அதன்பிறகு, இந்த அடிப்படை வசதிகள் அனைத்தும் இருப்பது உறுதியானால் மட்டுமே கட்டிடம் கட்ட அனுமதி கொடுக்க வேண்டும் என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   
  Published by:Sankaravadivoo G
  First published: