முகப்பு /செய்தி /தமிழ்நாடு / எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் கட்ட குழு அமைக்க வேண்டும் - நிதியமைச்சர்கள் கூட்டத்தில் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்

எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் கட்ட குழு அமைக்க வேண்டும் - நிதியமைச்சர்கள் கூட்டத்தில் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்

நிதியமைச்சர் கூட்டத்தில் பழனிவேல் தியாகராஜன்

நிதியமைச்சர் கூட்டத்தில் பழனிவேல் தியாகராஜன்

எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் கட்ட குழு அமைக்க வேண்டும் எனவும் பட்ஜெட்டுக்கு முந்தையை ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு துறையினருடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தி வருகிறார். தொழிற்துறையினர் மற்றும் வேளாண்துறையினருடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று மாநில நிதியமைச்சர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதில், தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார்.

ஆலோசனைக் கூட்டத்தில், பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், செஸ் மற்றும் கூடுதல் வரிகளை ஜிஎஸ்டியுடன் இணைக்க வேண்டும் என்றார்.நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீடு தொகையான 11,185 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மத்திய அரசு திட்டங்களில், 2021-ம் ஆண்டுக்கு முன்பு பின்பற்றியது போல, மத்திய - மாநில அரசுகள் 49 சதவீத நிதியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: ராஜேந்திர பாலாஜிக்கு நீண்ட நாள் ஜாமின் வழங்க முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட பணிகளுக்கு மத்திய அரசு 50 சதவீத நிதி வழங்க ஒப்புதல் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சென்னை - மதுரை, சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள அதிகாரம்மிக்க குழுவை அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

top videos

    சென்னையில் மழை வெள்ள பாதிப்பை தடுக்க, 2 ஆண்டுகளுக்கு முன்பு, 15-வது நிதி கமிஷன் பரிந்துரைத்த 500 கோடி ரூபாயை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இதுவரை விடுவிக்கவில்லை எனவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டினார்.

    First published:

    Tags: FINANCE MINISTER NIRMALA SITHARAMAN, Minister Palanivel Thiagarajan