முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மக்களவை அதிமுக தலைவர் ரவீந்திரநாத்.. அழைப்பு விடுத்த மத்திய அரசு..!

மக்களவை அதிமுக தலைவர் ரவீந்திரநாத்.. அழைப்பு விடுத்த மத்திய அரசு..!

ரவீந்திரநாத் எம்.பி

ரவீந்திரநாத் எம்.பி

நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் பங்கேற்க ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் நாளில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து, இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுதினம் காலை தாக்கல் செய்கிறார்.

இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நண்பகல் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது, கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு அளிக்குமாறு அரசியல் கட்சித் தலைவர்களை மத்திய அரசு கேட்டுக் கொள்ள உள்ளது.

இந்த நிலையில் அனைத்து கட்சி தலைவர்களுக்கான கூட்டத்தில் அதிமுக சார்பில் கலந்து கொள்வதற்கு தேனி தொகுதி எம்.பியும், ஓ.பன்னீர்செல்வம் மகனுமான ரவீந்திரநாத்திற்கு

பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவும் அவருக்கே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதில் மக்களவை அதிமுக தலைவர் ரவீந்திரநாத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இரு அணிகளாக செயல்படும் நிலையில், ரவீந்திரநாத்தின் அதிமுக எம்பி அந்தஸ்தை ரத்துசெய்யுமாறு மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு இபிஎஸ் கடிதம் எழுதி இருந்தார். இதுதொடர்பாக சபாநாயகர் முடிவெடுக்காத நிலையில், அதிமுக மக்களவை உறுப்பினராகவே ரவீந்திரநாத் தொடர்கிறார். இந்த நிலையில் அதிமுக சார்பில் கலந்துகொள்கிறார் ரவீந்திரநாத்.

First published:

Tags: AIADMK, Op raveendranath