இந்த பட்ஜெட்டிலாவது சலுகைகள் கிடைக்குமா? காத்திருக்கும் தீப்பெட்டித் தொழிலாளர்களின் கோரிக்கைகள் என்ன

இந்த பட்ஜெட்டிலாவது சலுகைகள் கிடைக்குமா? காத்திருக்கும் தீப்பெட்டித் தொழிலாளர்களின் கோரிக்கைகள் என்ன
கோப்புப் படம்
  • Share this:
அழிவின் விளிம்பில் இருக்கும் தீப்பெட்டித் தொழிலை மீட்டெடுக்க இந்த பட்ஜெட்டிலாவது புதிய அறிவிப்புகள் வருமா என காத்திருக்கின்றனர் தொழிலாளர்கள். 

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி 90 சதவீதம் தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. கோவில்பட்டி, விருதுநகர், சாத்தூர், சிவகாசி, குடியாத்தம், சங்கரன்கோவில் பகுதிகளின் பிரதான தொழிலாக இந்த தீப்பெட்டி உற்பத்தி உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகள் வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

பெண்கள் அதிக அளவில் ஈடுபட்டுள்ள இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 7 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர். ஏற்றுமதி மூலமாக மத்திய அரசுக்கு அந்நிய செலாவணியும் கிடைப்பதால் 7 சதவிகிதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அண்மைக்காலமாக இது படிப்படியாக குறைக்கப்பட்டு வருவது உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களைக் கவலை கொள்ள செய்துள்ளது.


ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, சிறுதொழில் பட்டியல் இருந்து நீக்கம் போன்ற நடவடிக்கைகளால் தீப்பெட்டி தொழில் அழிவுப் பாதைக்கு சென்றுள்ளது. இதனை மீட்டெடுக்க இந்த பட்ஜெட்டிலாவது அறிவிப்புகள் வர வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கையாக உள்ளது.

Also see:
First published: January 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading