தமிழக சட்டமன்றத்தில் 4 நாட்களுக்கு பட்ஜெட் குறித்த பொது விவாதம்

தலைமைச் செயலகம்

திண்டிவனம் ராமமூர்த்தி உட்பட 9 பேர் மறைவுக்கு இன்று இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது.

 • Share this:
  தமிழக சட்டமன்றத்தில் இன்று துவங்கி நான்கு நாட்களுக்கு நிதிநிலை அறிக்கைகள் தொடர்பான பொது விவாதம் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களின் பதிலுரை நடைபெற உள்ளது.

  இன்று சட்டபேரவையில் மறைந்த அதிமுக அவை தலைவர் மதுசூதனன், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்ம திண்டிவனம் ராமமூர்த்தி உட்பட 9 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது.

  பின்னர் மறைந்த மருத்துவர் எஸ்.காமேஸ்வரன், பழங்குடி மக்களின் உரிமை போராளி ஸ்டேன்சுவாமி, மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உட்பட மறைந்த ஐவருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

  Must Read : அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

  அதன் தொடர்ச்சியாக பேரவைக்கு மாற்று தலைவர்கள் குறித்து சபாநாயகர் அறிவிப்பார். அதைத் தொடர்ந்து நடப்பு நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை தொடர்பான பொது விவாதம் பேரவையில் நடைபெற உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இன்று துவங்கி நான்கு நாட்களுக்கு நிதி நிலை அறிக்கைகள் தொடர்பான பொது விவாதம் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களின் பதிலுரை நடைபெற உள்ளது.
  Published by:Suresh V
  First published: