மத்திய பட்ஜெட் 2020: வரிச்சலுகை எதிர்பார்க்கும் கோவை தொழிற்துறையினர்!

மத்திய பட்ஜெட் 2020: வரிச்சலுகை எதிர்பார்க்கும் கோவை தொழிற்துறையினர்!
ஜவுளித்துறை
  • Share this:
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கோவையில் உள்ள தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.

பொருளாதார மந்த நிலை காரணமாக தொழில்துறை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், பிப்ரவரி 1-ல் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் தங்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்கள் இடம்பெற வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பட்ஜெட் எதிர்பார்ப்புகள் தொடர்பாக பேசிய கொடிசியா அமைப்பின் தலைவர் ராமமூர்த்தி, புதிதாக தொழில்களை துவங்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றார்.

ஜவுளித்துறை எதிர்பார்ப்புகள் தொடர்பாக பேசிய டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பு தலைவர் பிரபு தாமோதரன், ’ஆயத்த ஆடை ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் வரிச்சலுகை மற்றும் சிறப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டும் எனவும், துறைமுகங்களுக்கு அருகே மெகா ஆடை நகரங்களை உருவாக்க வேண்டும் என்றார்.


மோட்டர் மற்றும் பம்புசெட்டுக்கான உற்பத்தி மற்றும் கொள்முதல் வரியை சமமாக நிர்ணயிக்க வேண்டுமென கோவை மாவட்ட மோட்டர் மற்றும் பம்புசெட் உற்பத்தியாளர் சங்கமான கோப்மா தலைவர் மணிராஜ் தெரிவித்துள்ளார். பெரு நிறுவனங்களையும், சிறு, குறு தொழில்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்காமல், சிறு, குறு தொழில்களுக்கு என தனிச்சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். 5 இலட்ச ரூபாய் வரை முழுமையாக வருமான வரி விலக்கு அளிக்க வேண்டுமெனவும், முத்ரா கடன் திட்டத்தில் தொழில் முனைவோருக்கு கடனுதவி அளிக்க வேண்டும் என்பதும் தொழில் துறையினரின் கோரிக்கையாக உள்ளது.

Also see:

 
First published: January 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading