சட்டவிரோதமாக பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்யக்கோரி மாறன் சகோதரர்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக பதவி வகித்த தயாநிதி மாறன் அவரது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, பி.எஸ்.என்.எல்-ன் அதிவிரைவு தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு ரூ.1.78 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியதாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரியும், குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்யக் கோரியும் மாறன் சகோதரர்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான வழக்கு இன்று விசாரணக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கு விசாரணையை 4 மாதங்களில் முடிக்க சிபிஐ-க்கு உத்தரவிட்டார். அதனுடன் மாறன் சகோரதர்களின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Also see... அரசியலில் குதித்தார் பவர் ஸ்டார் சீனிவாசன்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.