தவறுதலாக வெடித்த துப்பாக்கி குண்டு - படுகாயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போது தவறுதலாக துப்பாக்கி குண்டு வெடித்ததில் படுகாயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தவறுதலாக வெடித்த துப்பாக்கி குண்டு - படுகாயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பு
ஹவில்தார் எஸ் திருமூர்த்தி
  • News18
  • Last Updated: July 31, 2020, 2:25 PM IST
  • Share this:
கடந்த 24-ம் தேதி மாலை ஜம்மு காஷ்மீர் மாநிலம், கத்துவா மாவட்டம் ஹிராநகர் எல்லையில் பணியில் ஈடுபட்டிருந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹவில்தார் எஸ் திருமூர்த்தி என்ற பிஎஸ்எப் வீரரின் துப்பாக்கி குண்டு தவறுதலாக வெடித்ததில் அவர் படுகாயமடைந்தார்.

சம்பா மாவட்ட ராணுவ மருத்துவமனையில் திருமூர்த்தி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் துப்பாக்கி குண்டு வெளியே எடுக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையில், முன்னேற்றம் இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திருமூர்த்தி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் விரைவில் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு, இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.


இறந்த திருமூர்த்தி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் வடுவூர் அருகே புள்ளவராயன்குடிகாடு வடக்குத் தெருவைச் சேர்ந்தவர்.
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading