ஜாவாவை போலவே பிஎஸ்ஏ (BSA) மற்றும் யெஸ்டி(Yezdi) பிராண்டுகளை மீண்டும் உயிர்ப்பிப்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது கிளாசிக் லெஜெண்ட்ஸ் (Classic Legends) ஆட்டோமொபைல் நிறுவனம். ராயல் என்ஃபீல்டு 650 ட்வின்ஸான இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார் சைக்கிள்களை இலக்காக கொண்ட கோல்ட் ஸ்டார் 650-ஐ (Gold Star 650) வெளிப்படுத்தியதன் மூலம் சமீபத்தில் மீண்டும் BSA செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு வழங்கும் 650cc மோட்டார்சைக்கிள்களுடன் ஒப்பிடும் போது BSA-ன் லேட்டஸ்ட் 650cc வாகனம் எப்படி இருக்கிறது என்பது குறித்து இங்கு காண்போம்.
நவீன கிளாசிக் மோட்டார் சைக்கிளின் ரெட்ரோ-பாணி டிசைனை இது கொண்டுள்ளது. BSA-வின் இந்த புதிய கோல்ட் ஸ்டார் 650-ல் (Gold Star 650) ஆனது 652cc எஞ்சினை பெறுகிறது. மேலும் இது லிக்விட்-கூல்டு (liquid-cooled), DOHC, 4 வால்வு யூனிட் ஆகும். Gold Star 650 55nm பீக் டார்க் மற்றும் 45bhp ஆற்றலை வழங்கும் சிங்கிள் சிலிண்டர் 652cc எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
மேலும் இது 6,000rpm-ல், அதிகபட்சமாக 45bhp ஆற்றலையும், 4,000rpm-ல் 55nm பீக் டார்க்கையும் வழங்கும். ஆனால் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுக்கு பதிலாக, இது 5-ஸ்பீடு யூனிட்டை மட்டுமே பெறுகிறது. டைனமிக்ஸ் ஹார்டுவேரைப் பொறுத்தவரை, பைக் சஸ்பென்ஷன் அதன் வேலைகளை செய்ய முன்பக்கத்தில் ரேக்-அவுட் டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் டூயல் ப்ரீலோட்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பின்புற shock absorbers உள்ளன.
Also read: எப்போது அறிமுகமாகிறது Toyota-வின் Hilux பிக்-அப் டிரக் - வெளியான விவரங்கள்!
ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி650 ஆகியவற்றுடன் மேற்கண்ட ஸ்பெசிஃபிகேஷன்களை ஏன் ஒப்பிடுகிறோம் என்றால் இரண்டும் ஒரே எஞ்சினை கொண்டுள்ளன. இந்த ராயல் என்ஃபீல்டு பைக்குகள் 648சிசி பேரலல்-ட்வின், 4-ஸ்ட்ரோக், சிங்கிள் ஓவர்ஹெட் கேம், ஏர்/ஆயில்-கூல்டு, ஃப்யூயல்-இன்ஜெக்டட் என்ஜினை பெறுகின்றன. இந்த யூனிட் 7,150rpm-ல் 47bhp பவரையும், 5250rpm-ல் 52nm பீக் டார்க்கையும் வழங்கும்.
மேலும் இந்த எஞ்சின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. Gold Star 650 மோட்டார் சைக்கிளில் பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் ஒரு 320m டிஸ்க் இருக்கிறது. பின்புறத்தில் 255 mm டிஸ்க் உள்ளது. இது 12 லிட்டர் ஃபியூயல் டேங்க் கெப்பாசிட்டியை கொண்டுள்ளது மற்றும் 213 கிலோ எடையை கொண்டுள்ளது. BSA Gold Star 650-க்கு கான்டினென்டல் ஜிடி 650 நேர் போட்டியாக இருக்கும் போது, கான்டினென்டல் ஜிடி 650 பைக்கிலும் tubular steel ஃபிரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Also read: இந்தியாவில் அறிமுகமானது Harley-Davidson-ன் புதிய Sportster S - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
ராயல் என்ஃபீல்டின் கான்டினென்டல் GT 650-ன் சஸ்பென்ஷன் கிட்டில் 41mm ஃப்ரன்ட் ஃபோர்க், 110mm டிராவல் மற்றும் ட்வின் காயில்-ஓவர் ஷாக்ஸ், 88mm டிராவல் ஆகியவை அடங்கும். ஃபியூயல் டேங்க் கெப்பாசிட்டி மற்றும் எடை 13.7 லிட்டர் மற்றும் 202 கிலோவாக உள்ள நிலையில் இந்த மோட்டார் சைக்கிள் 174mm என்ற ஒரு டீசன்டான கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது. கோல்ட் ஸ்டார் 650 விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.