கும்பகோணத்தில் திருடியதை தட்டிக்கேட்ட அண்ணன், தம்பி இருவரும் வெட்டிக் கொலை - கொலையாளிகள் தலைமறைவு

மாதிரிப்படம்

கும்பகோணம் அருகே முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பி இருவரையும் படுகொலை செய்த கும்பல் தலைமறைவாகியுள்ளது.

 • Share this:
  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி தோப்புத்தெருவைச் சேர்ந்தவர் பூமிநாதன். அவரின் மகன்கள் அருண்குமார் (28), அரவிந்த் (25) ஆகியோரும் சந்தோஷ் (22) என்பவரும் நேற்று மாலை அதே பகுதி அய்யா கோயில் என்ற இடத்தில் நின்றுள்ளனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் மூவரையும் பயங்கர ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

  இந்த கொலைவெறித் தாக்குதலில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த மற்ற இருவரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த அருண்குமாரின் தம்பி அரவிந்த் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

  Also read: பயோமெட்ரிக் பிரச்னையைத் தீர்த்து, பொங்கல் பரிசை விரைந்து வழங்குக - டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

  இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து திருப்பனந்தாள் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பூமிநாதன் வீட்டில் இருந்த கேட்டின் கம்பியை காரல் மார்க்ஸ் என்பவரும் அவரது  நண்பர்களும் சேர்ந்து திருடியதாகக் கூறப்படுகிறது. அதை அருண்குமாரும் அவரது தம்பியும் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த காரல் மார்க்ஸ், தன் கூட்டாளிகளான நரேஷ், சதீஸ், ராஜேஷ் ஆகியோருடன் சேர்த்துகொண்டு அவர்கள் இருவரையும் வெட்டியதாக தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்கின்றனர்.
  Published by:Rizwan
  First published: