தூத்துக்குடி அருகே பேஸ்புக், வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிட்ட தங்கையை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த அண்ணன்!

பேஸ்புக், வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிட்ட தங்கையை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த அண்ணன்!

இதனை அவரது அண்ணன் மாலைராஜா கண்டித்துள்ளார். பல தடவை கண்டித்தும் கவிதா செல்போனில் விளையாடுவதை நிறுத்தவில்லையாம். 

  • Share this:
    தூத்துக்குடி அருகே முறப்பநாட்டில் பேஸ்புக், வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிட்ட தங்கையை அண்ணன் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள வசவப்பபுரம், பசும்பொன் நகரை சேர்ந்தவர் சுடலை. விவசாயியான இவருக்கு  மாலைராஜா (20) என்ற மகனும் கவிதா (17) என்ற மகளும் உள்ளனர். கவிதா பிளஸ் டூ படித்துள்ளார். இந்தநிலையில் கவிதா தனது செல்போன் மூலம் விடிய விடிய கேம் விளையாடுவது, பேஸ்புக், வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிட்டதாக கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனை அவரது அண்ணன் மாலைராஜா கண்டித்துள்ளார். பல தடவை கண்டித்தும் கவிதா செல்போனில் விளையாடுவதை நிறுத்தவில்லையாம்.  இந்நிலையில் இன்று மாலை கவிதா செல்போனில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இதை பார்த்த அவரது அண்ணன் மாலைராஜா சத்தம் போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மாலை ராஜா வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக தங்கை கவிதாவை வெட்டியுள்ளார். இதில் உடலில் 10க்கும் மேற்பட்ட இடத்தில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் கவிதா துடி, துடித்து பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் அங்கிருந்து மாலை ராஜா தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    Also read: ஆம்பூரில் உணவகத்தில் சேமியா பிரை கேட்டு கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்ட அதிமுக, காங்கிரஸ் பிரமுகர்கள்; வெளியான சிசிடிவி காட்சிகள்

    இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயகுமார், ருரல் டிஎஸ்பி பொன்னரசு ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையே தப்பியோடிய மாலை ராஜாவை வல்லநாடு காட்டுப்பகுதியில் வைத்து போலீசார் கைது சென்தனர். இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    செய்தியாளர் - பி. முரளி கணேஷ்
    Published by:Esakki Raja
    First published: