கீழடி 7-ஆம் கட்ட அகழாய்வில் வித்தியாசமான கிண்ணமும், மண்ணால் செய்யப்பட்ட மூடி குமிழும் கண்டுபிடிப்பு..

கீழடியில் கண்டறியப்பட்ட மண் மூடி குமிழ்

முதற்கட்டமாக ஆறு குழிகள் தோண்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

 • Share this:
  சிவகங்கை மாவட்டம், கீழடி 7-ஆம் கட்ட அகழாய்வில் சேதமடைந்த நிலையில் கூம்பு வடிவிலான கிண்ணமும், மண்ணால் செய்யப்பட்ட மூடி குமிழும் கண்டறியப்பட்டுள்ளது.

  ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய 4 இடங்களில் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஆறு குழிகள் தோண்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

  இதுவரை இரண்டு மீட்டர் ஆழம் தோண்டப்பட்டதில் 15 சென்டி மீட்டர் விட்டம் உள்ள கூம்பு வடிவிலான வித்தியாசமான கிண்ணமும், 1.40 சென்டிமீட்டர் விட்டமுள்ள உள்ளங்கைக்குள் அடங்கும் அளவில் சேதமடைந்த மண் மூடி குமிழும் கண்டறியப்பட்டது.  கலை நயத்துடன் செய்யப்பட்ட இவற்றின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது
  Published by:Sankaravadivoo G
  First published: