5 திருக்குறள் கூறிய பள்ளி மாணவர்களுக்கு 1/2 பிளேட் பிரியாணி...!

5 திருக்குறள் கூறிய பள்ளி மாணவர்களுக்கு 1/2 பிளேட் பிரியாணி...!
திருகுறளை ஒப்பிவிக்கும் பள்ளி மாணவர்கள்
  • News18
  • Last Updated: November 15, 2019, 11:08 AM IST
  • Share this:
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு திண்டுக்கல்லில் ஐந்து நிமிடத்தில் ஐந்து திருக்குறள் ஒப்பிவிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு பிரியாணி பரிசாக வழங்கப்பட்டது. 

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான முஜிப் பிரியாணி உணவகம், கடந்த மாதம் 16-ஆம் தேதி உலக உணவு திணத்தை முன்னிட்டு பழைய ஐந்து பைசா நாணயத்திற்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கியது.

இந்நிலையில் நேற்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 5 நிமிடத்தில் ஐந்து திருக்குறள் கூறும் 1 முதல் 8-ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு அரை பிளேட் காளன் பிரியாணி வழங்கியது.


இது குறித்து கடை உரிமையாளர் முஜிப் பேசுகையில் தமிழை வளர்க்கவும் திருக்குறளைப் பற்றியும் திருவள்ளுவரைப் பற்றியும் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக   குழந்தைகள் தினத்தன்று திருக்குறள் ஒப்பிக்கும் போட்டி நடத்தபட்டது என தெரிவித்தார்.

Also see...
First published: November 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...