அனைவருக்குமான கல்வியை ஆங்கிலேயர்களே கொடுத்தனர் - பா. ரஞ்சித்

news18
Updated: August 24, 2019, 12:27 PM IST
அனைவருக்குமான கல்வியை ஆங்கிலேயர்களே கொடுத்தனர் - பா. ரஞ்சித்
பா.ரஞ்சித்
news18
Updated: August 24, 2019, 12:27 PM IST
மாமன்னர்களின் காலம், மக்களை அழித்த காலம் என்று, இயக்குநர் ரஞ்சித் கல்வி உரிமை மாநாட்டில் விமர்சித்துள்ளார்.

ராஜராஜ சோழனின் ஆட்சி இருண்ட காலம் என்றும் அவரது காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டதாகவும், நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் ரஞ்சித் பேச, அதற்கு எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகி ரஞ்சித் முன்ஜாமின் பெற்றார்.

அதனை தொடர்ந்தும் அவர் மாமன்னர்களின் காலம் பற்றி தொடர்ந்து பேசி வருகிறார். நேற்று திருச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில்,புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி கருத்தரங்கம் நடைபெற்றது.


இதில் கலந்துகொண்ட இயக்குநர் ரஞ்சித், மாமன்னர்களின் காலத்தில் கட்டிய கோயில்கள், மடங்கள் உள்ளன? கல்வி நிலையங்கள் எங்கே என்று கேள்வி எழுப்பினார்.தொடர்ந்து பேசிய அவர், சாதிய ஏற்றத்தாழ்வு, சமூக சிக்கல்களை சரிசெய்யாமல் அரசியல் அதிகாரம் பெற்று பயனில்லை என்றும் கருத்து தெரிவித்தார்.

First published: August 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...