சீனாவில் உயிரிழந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த மருத்துவரின் உடலை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதியளித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 466 வது கந்தூரி விழாவில் சிறுப்பான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார். தொடர்ந்து ஆயிரம் பேருக்கு பிரியாணி பொட்டலங்களை அன்னதானமாக வழங்கினார்.பின்னர் உலகப் புகழ்பெற்ற
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு சென்று மாதா சுருபத்திற்கு மாலை வழங்கிய மெழுகுவர்த்தி ஏந்தி தனது குடும்பத்துடன் பிரார்த்தனையிலும் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து காரைக்கால் அடுத்துள்ள திருநள்ளார் சனீஸ்வரர் பகவான் ஆலயத்திற்கும் சென்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார். மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் மும்மதத்தினைச் சேர்ந்த ஆலயத்திற்கும் சென்று அமைச்சர் வழிபாட்டு மேற்கொண்டது பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
நாகையில் உள்ள நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு வெளிநாடுகளில் உயிரிழந்த 268 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறினார். வெளிநாடுகளுக்கு செல்வோர், அயலக தமிழர் நல வாரியத்தில் பதிவு செய்து சட்டத்திற்குட்பட்டு பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
புதுக்கோட்டையில் இருந்து சீனாவிற்கு சென்ற மருத்துவர் ஷேக் அப்துல்லா உயிரிழந்த நிலையில், அவர் பணிபுரிந்த நிறுவனம் மூலம் உடலை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும், ஷேக் அப்துல்லாவின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து உதவிகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.
செய்தியாளர்: பாலமுத்துமணி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: China, Nagapattinam