Home /News /tamil-nadu /

ராஜஸ்தானில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க வைகோ கோரிக்கை...!

ராஜஸ்தானில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க வைகோ கோரிக்கை...!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

55 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் 23 பேர் என மொத்தம் 78 பேர் தமிழகம் திரும்புவதற்கு உதவிடுமாறு ராஜஸ்தான் அரசுக்கு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ராஜஸ்தானில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை அழைத்துவர ஏற்பாடு செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு, ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வு பயிற்சி மையங்களில் சேர்ந்து மாணவர்கள் பயின்று வருவதாகவும், இவர்களில் சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 55 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் 23 பேர் என மொத்தம் 78 பேர் தமிழகம் திரும்புவதற்கு உதவிடுமாறு ராஜஸ்தான் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

    தமிழக மாணவர்களை ராஜஸ்தானிலிருந்து சொந்த ஊர்களுக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:
    Published by:Rizwan
    First published:

    Tags: Lockdown, Mdmk leader vaiko, Rajastan

    அடுத்த செய்தி