Home /News /tamil-nadu /

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்குத் தடையாக இருந்த மேம்பாலம் தகர்ப்பு!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்குத் தடையாக இருந்த மேம்பாலம் தகர்ப்பு!

பாலம் இருந்த இடம்

பாலம் இருந்த இடம்

எட்டுவழிப் பாதையாக இருக்கும் ரயில் தடம் விரைவில் 14 வழி தடமாக மாற்ற திட்டம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய தடையாக இருந்த மேம்பாலம் தகர்க்கப்பட்டுள்ளது. கொரோனோ காலத்திலும் தெற்கு ரயில்வே சென்னை கோட்ட கட்டுமானத்துறை திறம்பட செயலாற்றியுள்ளது.

1933ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்த யானைக்கவுனி மேம்பாலம் என்று அழைக்கக்கூடிய பிரிட்ஜ் 6 என்ற மேம்பாலத்தை கடந்த 2008ம் ஆண்டிலிருந்து மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக 2008, 2009 ஆகிய நிதியாண்டில் 43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி செயல்திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் மேம்பாலத்திற்கு அடியில் 230 கிலோவாட் உயர் மின்னழுத்த கேபிள்கள் சென்றதால் மேம்பாலத்தை இடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து பாலம் வலுவிழந்து வந்ததால் 2016ம் ஆண்டு கனரக வாகனங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. கடந்த ஆண்டு முற்றிலுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால் சென்னை சென்ட்ரல் விரிவாக்கம் பணி தொடர்ந்து தாமதமாகின. தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையமான சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புறப்படும் ரயில்கள் தற்போது 8 வழித்தடங்களை மட்டுமே கொண்டுள்ளது. இதனை மேம்படுத்தவும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை விரிவுபடுத்தவும் யானைக்கவுனி மேம்பாலத்தை மறுசீரமைப்பு செய்தால் மட்டுமே இயலும் என்பதால், பின்னர் மின்சார வாரியம் சார்பில் மூன்று மின் கோபுரம் அமைக்கப்பட்டு 230 கிலோவாட் மின் கம்பிகள் கோபுரம் வழியே பணித்தது. மீண்டும் செயல்திட்டம் வகுக்கப்பட்டு 2020ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகளை முடிக்க முடுக்கிவிடப்பட்டது.

இந்த ஊரடங்கு காலத்தில் ரயில்கள் இயங்காததால், இந்த பாலத்தை இடிக்கும் பணி 12 நாட்கள் நடந்து, முடிவடைந்துள்ளது. தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் கட்டுமானத் துறை மற்றும் தமிழக அரசு அதிகாரிகள், சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் பணியாற்றினர். அதிக திறன் கொண்ட ஜேசிபிக்கள் மூலம் மேம்பாலங்கள் இடிக்கும் பணிகளை அவர்கள் செய்தனர்.

தற்போது முற்றிலும் இந்த மேம்பாலம் அகற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெறும் என்பதால் எட்டுவழிப் பாதையாக இருக்கும் ரயில் தடம் விரைவில் 14 வழி தடமாக மாற்ற திட்டம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:
Published by:Rizwan
First published:

Tags: Chennai, Indian Railways

அடுத்த செய்தி