எனக்கு கொரோனா இருக்கு.. திருமண மண்டபத்தை அலறவிட்ட மணப்பெண்

Youtube Video

திருமணத்திற்கு சற்று முன் தனக்கு கொரோனா இருப்பதாக கூறி திருமணத்தை நிறுத்திய பெண், காவல் நிலையத்திற்கு சென்று தனக்கு விருப்பமில்லாமல் திருமணம் செய்வதாக மாப்பிள்ளை வீட்டார் மீது புகார் கூறியுள்ளார்

  • Share this:
    crஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், தர்மவரத்தை சேர்ந்த ஹரிபிரசாத் என்பவருக்கும், முதுகுப்பா பகுதியை சேர்ந்த குஷ்மா என்ற பெண்ணுக்கும் பெற்றோர்கள் திருமணம் நிச்சயத்தனர். கதிரியில் உள்ள கோவிலில் திருமணத்தை நடத்த இருவீட்டாரும் முடிவெடுத்தனர். திருமணத்திற்காக மாப்பிள்ளை வீட்டார் குஷ்மாவின் தாயாரிடம் பல கட்டங்களாக 1 லட்சத்து 50 ரூபாய் பணத்தையும், 13 சவரன் நகைகளையும் கொடுத்துள்ளனர். இதனை பெற்றுக் கொண்ட குஷ்மாவின் தாயார் திருமணத்திற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கதிரியில் உள்ள கோவிலில் திருமணம் செய்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருதரப்பினரும் வருகை தந்தனர். நலுங்கு சடங்குகள் அனைத்து முடிந்த நிலையில் திடீரென குஷ்மா தனக்கு கொரோனா தொற்று உள்ளது என்றும், எனவே திருமணத்தை நிறுத்துமாறும் கூறியுள்ளார். இதனால் குழப்பமடைந்த குடும்பத்தினர், குஷ்மாவை சமாதானப்படுத்த முயன்றனர். யாருடைய பேச்சையும் கேட்காத குஷ்மா, திடீர் என்று திருமண நடைபெற உள்ள கோவிலிலிருந்து வெளியேறினார்.

    அங்கிருந்து கதிரி காவல் நிலையத்திற்கு சென்ற குஷ்மா தனக்கு விருப்பமே இல்லாமல் திருமணம் நடத்துகின்றனர் என்று புகார் அளித்தார். திருமணத்திற்கு சில மணி நேரங்களே உள்ள நிலையில் மணப்பெண் இவ்வாறு நடந்து கொண்டதை பார்த்த உறவினர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். விரைந்து காவல்நிலையம் வந்த குடும்பத்தினர். மணப்பெண்ணின் குடும்பதினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    Also Read : எஸ்.யூ.வி காருக்குள் பாலியல் வன்புணர்வு செய்ய முடியுமா?: ஆர்.டி.ஓவிடம் அறிக்கை கேட்ட காவல்துறை!

    குஷ்மா மற்றும் அவரது குடும்பத்தினர் வேறு ஆதரவு இல்லாமல் வறுமையில் வாடியதாகவும் அவர்களுக்கு சிரமம் ஏற்படுத்தக் கூடாது எனக் கருதி குஷ்மாவின் திருமண செலவிற்காக தாங்கள் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 15 சவரன் நகைகளை வழங்கியதாக ஹரிபிரசாத் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் தெரிவித்தனர். ஆனால் தனக்கு விருப்பமில்லாத திருமணத்தை நடத்த முயற்சிக்கும் அவர்கள் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பணம் மட்டுமே வழங்கினார்கள் எனக் குஷ்மா தெரிவித்தார்.

    மேலுக் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், இந்த நிலையிலும் தனக்கு கட்டாயத் திருமணம் செய்ய அவர்கள் வற்புறுத்துவதாகவும் மணப்பெண் குற்றம்சாட்டினார். ஆனால் ஹரிபிரசாத் குடும்பத்தினர் திருமணத்திற்காக வழங்கிய பணம் நகைகளை தங்களுக்குப் பெற்றுத் தரவேண்டும் என போலீசாரிடம் வலியுறுத்தினர். தங்களை விட வேறு யாராவது அதிக பணம் மற்றம் நகை தருவதாக கூறியதால் திடீரென குஷ்மா மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மணமகன் குடும்பத்தார் குற்றம்சாட்டினர்.

    Also Read : பேய் விரட்டுவதாக கூறி பெண்களை சாட்டையால் கொடூரமாகத் தாக்கிய போலி சாமியார் கைது...

    இருதரப்பு பேச்சை கேட்ட போலீசார் விருப்பமில்லாத திருமணத்தை செய்ய முடியாது எனக் கூறி மணமகன் வீட்டாரை சமாதானப்படுத்தினர். பணம் கொடுக்கல் வாங்கல் குறித்து தர்மவரம் காவல் நிலையத்தில் பேசித் தீர்த்துக் கொள்ளுமாறு கூறிய போலீசார், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் காவல் நிலையத்தில் இருக்கக்கூடாது எனக் கூறி அனைவரையும் அங்கிருந்து செல்லுமாறு வலியுறுத்தினர்.

    இல்லை என்றால் நோய்த்தொற்று பரப்புதல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என கூறி அங்கிருந்த அனைவரையும் அனுப்பிவைத்தனர். திருமணத்தை நிறுத்த போலி நாடகமாடிய மணப்பெண்ணின் செயலால் கதிரி காவல்நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
    Published by:Vijay R
    First published: