• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காலில் விழுந்த வடமாநிலத் தொழிலாளர்கள்: உணவுப் பொருள்கள் வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த முதலாளி- சிவகங்கையில் நெகிழ்ச்சி சம்பவம்

காலில் விழுந்த வடமாநிலத் தொழிலாளர்கள்: உணவுப் பொருள்கள் வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த முதலாளி- சிவகங்கையில் நெகிழ்ச்சி சம்பவம்

புலம்பெயர் தொழிலாளர்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள்

  • Share this:
கொரோனா வைரஸ் காரணமாக வட மாநில தொழிலாளர்கள் ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் இருந்த செங்கல் சேம்பரில் வேலை செய்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

செங்கல் சேம்பரில் இருந்து அனுப்பி வைக்கபட்ட போது தாங்கள் வேலை செய்த உரிமையாளர் காலில் விழுந்து வணங்கி சென்றது நெகிழ்ச்சி ஏற்படுத்தியது. மானாமதுரை அருகே கிளாங்காட்டூர் தனியார் சேம்பரில் இருந்து மேற்குவங்கத் தொழிலாளர்கள் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இன்று வழி அனுப்பி வைக்க்பட்டனர். முன்னதாக சேம்பரில் இருந்து கிளம்பிய தொழிலாளர்கள், சேம்பர் உரிமையாளர் துபாய் காந்தி காலில் விழுந்து வணங்கி சென்றனர்.

தொழிலாளர்கள், துபாய் காந்தி காலில் விழுந்தவுடன் அவர்களை தடுத்து கட்டிபிடித்து கண் கலங்கி அனுப்பி வைத்தார். அவர்களுக்கு அவர் சார்பில் ஒவ்வொருவருக்கும் தலா 2ஆயிரம் பணம், அவர்களுடைய குழந்தைகளுக்கு பிஸ்கட் ,பழம், தின்பண்டங்கள், தண்ணீர் கேன், மதிய சாப்பாடு சிக்கன் பிரியாணி உட்பட அனைத்தும் சொந்த செலவில் செய்து கொடுத்து, அவர்களுக்கு தனியாக இரு கார்களை ஏற்பாடு செய்து அவர்களை மதுரை ரயில் நிலையத்தில் இறக்கி  விட்டு வர சொல்லி வழி அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து தெரிவித்த தொழிலாளர்கள், ‘கொரோனா தாக்கத்தில் இரண்டு மாதம் வேலை இல்லமால் இருந்த போதிலும், இங்கு வேலை செய்த நாட்கள் முழுவதும் எங்களை ஒரு தொழிலாளர்கள் போல் இல்லமால் தனது பிள்ளைகள் போல் பார்த்தார் என்றும் இரண்டு மாதத்திற்கு சாப்பாடு, மருத்து வசதியும் செய்தி கொடுத்து என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.





சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Also see:


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: