ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை- ஈ.பி.எஸ் தரப்பு
ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை என நீதிமன்றத்தில் விளக்கம்.
2 கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சிக்கு எதிராகவும் பொதுக்குழுவுக்கும் எதிராகவும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஒட்டு மொத்த கட்சியும் தனக்கு எதிராக இருப்பதாக நினைத்து வழக்கு தொடர்ந்துள்ளார். - ஈபிஎஸ் தரப்பு
ஷின்சோ அபே உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது - ஜப்பான் பிரதமர் தகவல்
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே நாரா நகரில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டார். இரத்த காயங்களுடன் அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ஷின்சோ அபே உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.
கல்லூரிகளில் விண்ணப்பிக்க அவகாசம் : அமைச்சர் பொன்முடி
பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க அவகாசம்.சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகும் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம். கல்லூரிகளில் விண்ணப்பிக்க தேதி குறிப்பிடாமல் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் நீட்டிப்பு வழங்குவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.