தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க கிளிக் செய்க
பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் பேச்சு :
நான் படித்த மாநில கல்லூரி நிகழ்சியில் பங்கேற்பதில் இருமாப்படைகிறேன். உங்களது சீனியர் எனும் அடிப்படையில் மாணவர்களை வாழ்த்துகிறேன்..
மிசா காலத்தில் ஓராண்டு சிறையிலிருந்த போது போலீஸ் பாதுகாப்போடு இந்த கல்லூரியில் தேர்வு எழுதினேன். அறிவு சொத்துக்களை உருவாக்கி தரும் மகத்தான கல்லூரியாக மாநில கல்லூரி திகழ்கிறது.