நடிகர் விஜய் தொடர்ந்த நுழைவு வரி வழக்கு முடித்து வைப்பு
சொகுசு காருக்கு நுழைவு வரியை ரத்து செய்யக்கோரி விஜய் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
2019 ஜனவரிக்கு முன் நுழைவு வரி செலுத்தியிருந்தால் நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்க கூடாது
2019-ம் ஜனவரிக்கு பின்பும் வரி செலுத்தாமல் இருந்தால் வணிகவரித்துறை அபராதம் விதிக்கலாம்
சர்ச்சை வினாத்தாள் விவகாரம் - அறிக்கை கேட்டது பெரியார் பல்கலைக்கழகம்
சர்ச்சைக்குரிய வினாத்தாளை வடிவமைத்தது யார்? என்று விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க பெரியார் பல்கலை., தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரிக்கு துணைவேந்தர் ஜெகன்நாதன் உத்தரவு. உரிய விசாரணை நடத்த விசாரணைக் குழு அமைக்கப்பட உள்ளதாக துணைவேந்தர் ஜெகன்நாதன் தகவல்.
தமிழக பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு.நாசருக்கு கொரோனா தொற்று. கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் நேற்று முதல் உடல் சோர்வுற்று இருந்ததாகவும் பின்னர் பரிசோதனை செய்ததில் COVID-19 உறுதி செய்யப்பட்டு இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன் என அந்த முகநூல் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது அடையாறு அரசு பங்களாவில் சிகிச்சைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.