சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் 83-வது முறையாக ஒரே நேரத்தில் 4 கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியதால் பயணிகள் அலறியடித்து ஓடினர்.
சென்னை விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான முனையங்கள் கட்டப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இந்த புதிய முனையங்களில் கண்ணாடிகள் உடைவது தொடர் கதையாகி வருகிறது. இதுவரை 82 முறை சுவர் கண்ணாடிகள், தானியங்கி கதவு கண்ணாடிகள், சுவற்றில் பாதிக்கப்பட்ட கிரைனட் கற்கள் உடைந்து விழுந்துள்ளன. தற்போது 83-வது முறையாக 3-வது நுழைவு வாயில் மேல் பகுதியில் உள்ள 4 கண்ணாடிகள் ஒரே நேரத்தில் சுக்குநூறாக உடைந்து விழுந்தது. இதை கண்ட பயணிகள் அலரியடித்து ஒடினர்.
8 அடி நீளம், 4 அடி அகலம் கொண்ட 4 கண்ணாடிகள் திடீரென உடைந்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. தகவல் அறிந்ததும் விமான நிலைய ஊழியர்கள் விரைந்து வந்து உடைந்த கண்ணாடிகளை அகற்றினர். இது பற்றி விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Prabhu Venkat
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.