Tamil News Live : வன்முறையாக மாறிய கேரளா பந்த்... தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உயர்நீதிமன்றம்!

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | September 23, 2022, 14:14 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 14 DAYS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    14:48 (IST)

    தமிழகத்தில் இதுவரை 442 பேருக்கு ஹெச்1 என்1 பாதிப்பு

    தமிழகத்தில் இன்றைய தினம் வரை 442 பேருக்கு ஹெச்1.என்.1 தொற்று பாதிப்பு உள்ளதாகவும் இதில் ஏழு பேர் மட்டுமே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல் தெரிவித்துள்ளார்.

    14:37 (IST)

    உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத 8,588 மாணவர்கள்... பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு!

    பிளஸ் 2  முடித்து 8,588 மாணவர்கள் எவ்வித உயர்கல்விக்கும் விண்ணப்பிக்கவில்லை என்பதால், உயர்கல்வி தொடராத மாணவர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாணவரையும் தொடர்புகொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

    13:38 (IST)

    வன்முறையாக மாறிய கேரளா பந்த்... தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உயர்நீதிமன்றம்!

    கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அழைப்பு விடுத்த பந்திற்கு அம்மாநில உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் கேரளாவில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களால் கேரளா உயர்நீதிமன்றம்  தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.

    11:11 (IST)

    திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகள் ரத்து

    1995ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக சிபிசிஐடி  தொடர்ந்த வழக்கை ரத்துசெய்ய கோரி திமுக எம்.பி.ஜெகத்ரட்சகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

    10:40 (IST)

    செப்.26ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்


    செப்.26ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. விரைவில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    10:30 (IST)

    கேரளாவில் முழு அடைப்பு: ஹெல்மெட் அணிந்து பேருந்து ஓட்டும் டிரைவர்கள்!

    நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் வீடுகளில் என்ஐஏ சோதனை நடைபெற்ற நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று  கேரளாவில் பந்த் அறிவிக்கப்பட்டது. இதில் பந்த்தை மீறி வாகனங்களை இயக்கிய பேருந்துகளின் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்த மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஹெல்மெட் அணிந்தபடி பேருந்துகளை ஓட்டுநர்கள் இயக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

    10:14 (IST)

    இந்திய ரூபாயின் மதிப்பு 2வது நாளாக வரலாறு காணாத வீழ்ச்சி

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 39 காசுகள் சரிந்து வரலாறு காணாத வகையில் 81.18 ஆக வர்த்தமாகி வருகிறது.

    9:22 (IST)

    B.Ed மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலம்!

    B.Ed மாணவர் சேர்க்கைக்கு http://tngasaedu.in என்ற இணையதளத்தில் நாளை முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. மேலும்  அக்டோபர் 6ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அக்டோபர் 12ஆம் தேதி மாணவர் சேர்க்கைக்கான  கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    8:53 (IST)


    ரோஜர் பெடரர் பங்கேற்கும் கடைசி டென்னிஸ் தொடர்! 

    பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் லண்டனில் இன்று நடைபெறும் லேவர் கோப்பை தொடரில் தனது கடைசி ஆட்டத்தை ஆடுகிறார்.

    8:2 (IST)

    வெற்றி கணக்கை தொடங்குமா இந்திய அணி?

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2 ஆவது டி20 போட்டி, நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி நடைபெறுகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கிறது.