சொத்து குவிப்பு வழக்கில் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி
14:48 (IST)
டெண்டர் முறைகேடு தொடர்பாக எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். எஸ்.பி.வேலுமணியின் மனுவை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
14:24 (IST)
9 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் கூடுதல் பொறுப்பு வழங்கி உள்துறை செயலர் உத்தரவு
11:59 (IST)
பழைய பேருந்துகளை கழிவு செய்து புதிய பேருந்துகளை வாங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை. மாநகர போக்குவரத்துக் கழகம், விரைவு போக்குவரத்து கழகம் தவிர்த்து இதர கோட்டங்களுக்கு சேர்த்து ரூ.420 கோடி ஒதுக்கீடு
10:40 (IST)
இறந்த லட்சுமி யானை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்; யானையின் வழித்தோன்றலாக இன்னொரு யானைக்கு ஏற்பாடு செய்யப்படும் - ஆளுநர் தமிழிசை
10:4 (IST)
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகள் மற்றும் ஏரிகளில் படகு சவாரி மற்றும் நீர் விளையாட்டுகள் அறிமுகப்படுத்த திட்டம் - தமிழ்நாடு சுற்றுலாத்துறை தகவல்
8:30 (IST)
ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில் நிலைய ஊழியர்கள் ஆகியோர் தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.
8:29 (IST)
திருப்பதி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த திருமலா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. அணைக்கப்படாத சிகரெட் துண்டால் ஒரு பெட்டியில் தீ விபத்து.
7:44 (IST)
தமிழ்நாட்டில் இருந்து செம்மரம் வெட்டுவதற்காக லாரியில் ஆந்திராவுக்கு வந்த கூலி தொழிலாளர்கள் 40 பேர் கைது.
7:42 (IST)
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஒன்றிய அரசின் சார்பில் விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று டெல்லியில் நடைபெற உள்ளது