Tamil News Live: சொத்து குவிப்பு வழக்கு - ஆ. ராசாவுக்கு சம்மன்

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

 • News18 India
 • | November 29, 2022, 17:35 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 2 MONTHS AGO

  AUTO-REFRESH

  HIGHLIGHTS

  18:7 (IST)

  மன்னிப்பு கோரினார் சைதை சாதிக்

  பாஜகவை சேர்ந்த நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து திமுக பொதுக் கூட்டத்தில் ஆபாசமாக பேசியதாக சைதை சாதிக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த வழக்கில், நீதிமன்ற உத்தரவையடுத்து மன்னிப்பு கோரினார் சைதை சாதிக். 

  பிரமாண பத்திரத்தை ஏற்று நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. விசாரணை அதிகாரி முன்பு ஒரு வார காலத்திற்கு ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை.

  17:29 (IST)

  சொத்து குவிப்பு வழக்கு - ஆ. ராசாவுக்கு சம்மன்  

  வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக சிபிஐ 2015ஆம் ஆண்டில் பதிவு செய்த வழக்கில் திமுக எம்.பி ஆ. ராசாவிற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், ஆ.ராசா, கிருஷ்ணமூர்த்தி, என்.ரமேஷ், விஜய் சதராங்கனி அகியோர் ஜனவரி 10ல் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது சிபிஐ சிரப்பு நீதிமன்றம். வருமானத்திற்கு அதிகமாக ரூ. 5.53 கோடிக்கு சொத்துக்களை குவித்துள்ளதாக கடந்த மாதம் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

  16:12 (IST)

  டிசம்பர் 1 முதல் டிஜிடல் கரன்சி - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

  டிசம்பர் 1 முதல் டிஜிடல் ரூபாய் அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு. புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் கரன்சி அறிமுகமாகும். 
  SBI, ICICI, Yes Bank, IDFC bank ஆகிய வங்கிகள் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்துகிறது. 

  16:11 (IST)

  நீரில் மூழ்கி உயிரிழந்த செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

  16:7 (IST)

  3 மாணவர்கள் சஸ்பெண்ட் - சி எம் சி நடவடிக்கை 

  ராகிங்கை தடுக்க கல்லூரியில் 24 மணி நேர பாதுகாப்பும், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்ற கல்லூரி அறிக்கையை ஏற்று தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

  ஏற்கனவே 7 மாணவர்க்ள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 மாணவர்கள் மீது நடவடிக்கை. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் கவனிக்க கல்லூரி நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.

  15:19 (IST)

  கோடநாடு வழக்கு - 49 பேர் கொண்ட தனிப்படை அமைப்பு

  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க சிபிசிஐடி எஸ்.பி. சி.எஸ்.மாதவன் தலைமையில் 49 பேர் கொண்ட தனிப்படை  அமைத்து தமிழக சிபிசிஐடி அரசாணை வெளியிடபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

  13:31 (IST)

  வருகிற டிசம்பர் 6ஆம் தேதி மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  12:44 (IST)

  ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி வழக்கு!

  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு. காஞ்சிபுரம் மாவட்ட தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சனாதன தர்மத்திற்கு ஆதரவாக பேசிவருவதாக குற்றச்சாட்டு.

  11:35 (IST)

  குறிப்பிட்டுள்ள சில அம்மா உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு பின்னர் நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். அதுவரையில் அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து செயல்படும் - மேயர் பிரியா

  11:34 (IST)

  சென்னையில் அம்மா உணவகங்கள் 786 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஒரு நாளுக்கு 500 ரூபாய்க்கு கீழ் வருமானம் வரும் அம்மா உணவகங்களை உடனடியாக மூட வேண்டும் - கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன்