டிசம்பர் 15ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு
6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் தேர்வுகள் நடைபெறுகிறது. டிசம்பர் 15 முதல் 23ந் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு.
6,8,,10,12ம் வகுப்புகளுக்கு காலையிலும் 7,9,11 ம்வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு.
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு. மேலும், கோவை, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.