Tamil News Live: மங்களூரு குண்டு வெடிப்பு - NIA விசாரணைக்கு உத்தரவு

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | November 25, 2022, 17:35 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 6 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    17:33 (IST)

    மங்களூரு குண்டு வெடிப்பு - NIA விசாரணைக்கு உத்தரவு

    கடந்த 19ஆம் தேதி மங்களூருவில் குண்டு வெடித்ததை அடுத்து, இதை குறித்து NIA விசாரிக்க வேண்டும் என கர்நாடக அரசு பரிந்துரைத்த நிலையில், NIA விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    17:19 (IST)

    கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: நவம்பர் 30ல் அறிக்கை தர சிபிசிஐடி-க்கு உத்தரவு

    கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில், பள்ளி கட்டிடம் புலன் விசாரணைக்கு தேவைப்படுகிறதா?

    நவம்பர் 30ம் தேதி அறிக்கை அளிக்க சிபிசிஐடி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    புலன் விசாரணை எப்போது முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் கேள்வி

    17:9 (IST)

    உடும்பு விழுந்ததால் பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் 

    குற்றாலம் மெயின் அருவியில்  6 அடி நீளமுள்ள உடும்பு விழுந்தால் பக்தர்கள் அலரி அடித்து ஓட்டம் பிடித்த நிலையில்  உடும்பை மீட்ட வனத்துறையினர் 

    16:54 (IST)

    ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் இல்லை

    ராஜேந்திர பாலாஜிக்கு நீண்ட நாட்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது

    பண மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி முக்கிய குற்றவாளியாக உள்ளார்: உச்சநீதிமன்றம்

    தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி கோரிய ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

    13:43 (IST)

    கோகுல்ராஜ் கொலை வழக்கு: வழக்கு விசாரணையின் போது சவாதி மயங்கி விழுந்தார்.

    12:50 (IST)

    கோகுல் ராஜ் கொலை வழக்கு: சுவாதி மீது குற்றவியல் நடவடிக்கை!

    கோகுல் ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியான சுவாதி மீது குற்றவியல் நடவடிக்கை வழக்கு பதிவு செய்ய உள்ளோம்.

    - உயர்நீதிமன்ற மதுரை கிளை

    12:33 (IST)

    நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!

    லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் கமல்ஹாசன் வீடு திரும்பினார்.

    9:12 (IST)

    எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு 'குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்' விருது அறிவிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து. திராவிட இயக்கத்தின் ஆற்றல்மிகு எழுத்தாளர்களின் தொடர்ச்சி என புகழாரம்.

    7:58 (IST)

    திருவண்ணாமலை தீபத்திருவிழா - 14 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை!

    திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு டிசம்பர் 6,7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    7:30 (IST)

    பிரதமர் பேரணியில் பாதுகாப்பு குறைபாடு?

    குஜராத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பேரணியில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானம். 3 பேர் கைது.