Tamil News Live: 12 ஆண்டுகளுக்கு பின் அரசு பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | November 24, 2022, 18:06 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 5 DAYS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    18:6 (IST)

    12 ஆண்டுகளுக்கு பின் அரசு பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு


    அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஜாக்டோ ஜியோ மாநாட்டில் பங்கேற்ற முதல்வர், பகுதி நேர ஆசிரியர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் பணியிட மாறுதல் கலந்தாய்வு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். ஆனால் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு கல்வித் துறை நடவடிக்கை எடுக்காத நிலையில் நாளை போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து தற்போது கலந்தாய்வு  நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    16:16 (IST)

    ஜல்லிக்கட்டு தடைக்கோரிய வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு

    ஜல்லிக்கட்டு தடைக்கோரிய வழக்கு விசாரணையை நவம்பர் 29-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தமிழ்நாடு அரசு வாதங்களை புதன்கிழமை முன்வைக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

    15:39 (IST)

    கமல்ஹாசன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

    லோசான காய்ச்சல், சலி, இருமல் காரணமாக நேற்று சென்னை ராமசந்திர மருத்துவமனையில் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருக்கும் கமல்ஹாசன் உடல்நிலை முன்னேறி உள்ளதால் ஒரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என ராமசந்திர மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    13:52 (IST)

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம்.

    12:31 (IST)

    எத்தனை ஆண்டுகள் அரியர் வைத்திருந்தாலும் மாணவர்கள் வருகின்ற டிசம்பர் மற்றும் ஜனவரியில் நடைபெறக்கூடிய செமஸ்டர் தேர்வோடு அரியர் தேர்வினை எழுதிக் கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

    10:42 (IST)

    தென்காசி MLA பழனி நாடாருக்கு சொந்தமான ட்ராக்டர் வாகனம் மோதி நான்கு வயது சிறுவன் பலி

    10:21 (IST)

    சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. அவர் தனது வீட்டில் நலமாக இருக்கிறார் - சமந்தாவின் மேலாளர் 

    9:29 (IST)

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில  நாட்களாகவே அதிகாலை முதல் அதிகப்படியான பனிமூட்டம்

    8:23 (IST)

    படப்பிடிப்பில் ஈடுபட்ட நிலையில் மீண்டும் அவரது உடல் நிலை மோசமாகி  ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

    8:22 (IST)

    மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்