Tamil News Live: குஜராத் சென்றார் ஓபிஎஸ்

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | December 11, 2022, 21:28 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 9 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    21:26 (IST)

    குஜராத் சென்றார் ஓபிஎஸ்

    குஜராத்தில் வெற்றி பெற்றதையதையடுத்து பூபேந்திர படேல் நாளை முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சிக்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் குஜராத் சென்றார். 

    19:23 (IST)

    முடங்கியது ட்விட்டர்

    உலகம் முழுவதும் சில பயணாளர்களுக்கு ட்விட்டர் தளம் முடங்கியது. இது குறித்து நெட்டிசன்கள் மற்ற சமுக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    19:22 (IST)

    25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி என 25 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

    18:34 (IST)

    முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் காலமானார்

    விருதுநகர் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் நெஞ்சுவலி காரணமாக சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

    18:19 (IST)

    சுக்விந்தர் சிங்கிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    ஹிமாச்சல பிரதேச முதல்வராக பதவியேற்கவுள்ள சுக்விந்தர் சிங்கிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    17:58 (IST)

    மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை

    சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வருவதற்கு தடை நீடிக்கிறது. தேங்கி நிற்கும் மழை நீர்,கடல் சீற்றம் போன்ற காரணங்களால் கடற்கரைக்கு வரும் பொதுமக்களை போலீசார் திருப்பி அனுப்புகின்றனர்

    16:12 (IST)

    25 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

    திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம், தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை மற்றும் மதுரை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 25 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல். 

    15:33 (IST)

    சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு

    சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால்  சபரிமலையில் தரிசன நேரம் அரை மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று இரவு 11.30 மணி வரை தரிசன நேரம் அதிகரிக்க முடிவு.

    14:0 (IST)

    இமாச்சல பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் சுக்விந்தர் சிங் சுகு! 

    சிம்லாவில் நடைபெற்று வரும் இந்த பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்!

    10:28 (IST)

    6வது வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

    இன்று நாக்பூர் ரயில் நிலையத்தில் 6வது வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.