Union
Budget 2023

Highlights

Tamil News Live: குஜராத்தில் 60.20 சதவீதம் வாக்குப்பதிவு

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | December 02, 2022, 11:20 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    19:3 (IST)


    குஜராத்தில் 60.20 சதவீதம் வாக்குப்பதிவு


    குஜராத்தில் முதற்கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

    60.20 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல்

    17:0 (IST)

    முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்கள் முடக்கம்

    வரி பாக்கியை செலுத்தாததால் விஜயபாஸ்கரின் சொத்துக்கள் வங்கிக் கணக்குகள் முடக்கம்

    வரி பாக்கியில் 20 சதவீதத்தை செலுத்துமாறு கடிதம் அனுப்பட்டும் வரி செலுத்தவில்லை- சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித் துறை பதில் 

    வருமான வரித்துறையின் நடவடிக்கைக்கு எதிராக விஜயபாஸ்கர் மனு: விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

    15:38 (IST)

    ஜல்லிக்கட்டு இல்லாவிட்டால் காளை இனம் அழியும்

    ஜல்லிக்கட்டுக்கு தடைகோரும் மனுக்களை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்

    நாட்டு இனத்தை பாதுகாக்க மத்திய அரசும் தமிழக அரசும் அக்கறை காட்டுகிறது -தமிழ்நாடு அரசு

    பீட்டா அமைப்பினரின் வாதங்களுக்கு தமிழக அரசு தரப்பில் பதில் 

    உள்நாட்டு காளைகள் அழிந்துவிட்டால் மிகவும் ஆபத்தானது -தமிழ்நாடு அரசு தரப்பில் கபில்சிபல் வாதம்

    12:58 (IST)

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்

    12:33 (IST)

    புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு புதிய யானை வாங்குவது தொடர்பாக அரசிடம் இதுவரை எந்த முடிவும் இல்லை - முதலமைச்சர் ரங்கசாமி 

    11:49 (IST)

    ஆளுநர் சந்திக்க நேரம் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் சந்தித்து இருக்கிறோம். ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குமுறைப்படுத்தவும் அரசின் சட்டத்திற்கும் ஒப்புதல் அளிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது- அமைச்சர் ரகுபதி

    11:48 (IST)

    ஆன்லைன் ரம்மி சட்டம் பரிசீலனையில் உள்ளதாக ஆளுநர் தெரிவித்தார். ஒரு சில சந்தேகங்கள் இருக்கிறது அதனை தெளிவுபடுத்திவிட்டு ஒப்புதல் தருவதாக கூறியுள்ளார் - அமைச்சர் ரகுபதி

    10:51 (IST)

    அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர் கூட்டம் தொடங்கியது.

    10:41 (IST)

    ஆன்லைன் ரம்மி சட்டமசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வலியுறுத்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் சந்தித்து ஆலோசனை

    9:36 (IST)

    கடலூர் வேப்பூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் கிணற்றில் குதித்து தற்கொலை