11 ஆண்டுக்கு பின் துவங்கிய மதுரை-தேனி ரயில் சேவை..!
11 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் துவங்கப்பட்ட மதுரை - தேனி ரயில் சேவையின் முதல் பயணத்தை குடும்பத்துடன் துவங்கிய மக்கள் வழிநெடுகிலும் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
9:3 (IST)
தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை..!
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் தயாரித்தல், விநியோகித்தல், பதுக்குதல் போன்றவற்றுக்கு மேலும் ஓராண்டுக்கு தடை - தமிழ்நாடு அரசு
6:37 (IST)
சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இணைப்புக் கல்லூரிகள் உறுப்புக் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 2ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை பல்கலைக் கழகம் அறிவிப்பு
6:33 (IST)
கல்லணையில் இன்று தண்ணீர் திறப்பு..!
மேட்டூர் அணையை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லணையில் இருந்தும் முன்கூட்டியே இன்று தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
5:37 (IST)
கடலூரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயங்கர இடி சத்தத்துடன் கூடிய பெய்த கனமழையால் தென்னை மரம் ஒன்று பற்றி எரிந்தது. பின்னர் தொடர் மழையில் தானாகவே பற்றி எரிந்த நெருப்பு அணைந்தது.