அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமனம் - ஓ.பி.எஸ் அறிவிப்பு

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

 • News18 Tamil
 • | July 25, 2022, 15:42 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 17 DAYS AGO

  AUTO-REFRESH

  HIGHLIGHTS

  17:57 (IST)

  தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

  இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கைகோரி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

  16:34 (IST)

  கனியாமூர் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு நாளை மறுநாள் முதல் ஆன்லைன் வகுப்பு

  9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் நேரடி வகுப்புகள் நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், தீயில் எரிந்துள்ள ஆசிரியர்களின் சான்றிதழ்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

  16:18 (IST)

  மக்களவையில் அமளியில் ஈடுபட்ட 4 காங்கிரஸ் எம்.பிக்கள் சஸ்பெண்ட்!

  மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உட்பட 4 காங்கிரஸ் எம்.பிக்களை அவைத் தலைவர் ஓம் பிர்லா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். 

  15:33 (IST)

  அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமனம் - ஓ.பி.எஸ் 

  அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். துணை ஒருங்கிணைப்பாளர்களாக கு.ப.கிருஷ்ணன், ஜே சிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத் உள்ளிட்ட 10 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். 

  15:21 (IST)

  ஆர்டர்லிகளை திருப்பி அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு

  ஆர்டர்லி வைத்திருப்பதாக தகவலோ, புகாரோ வந்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை உயர்அதிகாரி மீது நன்னடத்தை விதிகளின் கீழ் உள்துறை முதன்மை செயலாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மற்ற துறைகளை போல் காவல்துறையும் அரசு முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  14:10 (IST)

  இளையராஜா எம்.பி-யாக பதவியேற்றார்

  மாநிலங்களவை நியமன உறுப்பினராக இளையராஜா பதவியேற்றார். கடவுளின் பெயரால் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.


  13:21 (IST)

  திருவள்ளூர் +2 மாணவி மரணம் - சிபிசிஐடி விசாரணை

  திருவள்ளூர் அருகே உள்ள கீழச்சேரியில் தனியார் பள்ளி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட விவகாரத்தில் சிபிசிஐடி டிஎஸ்பி செல்வக்குமார் தலைமையிலான போலீஸார் விசாரணை.

  13:9 (IST)

  கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி.

  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகிலுள்ள தனியார் கல்லூரியில் பி.காம்  இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி கல்லூரி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி. ஆபத்தான நிலையில் மாணவி முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. 

  12:16 (IST)

  தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடலூர், நாகை, திருச்சி திருவாரூர்,உள்ளிட்ட 9 மாவட்டங்களின் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை  பெய்ய வாய்ப்புள்ளது.

  11:49 (IST)

  இலவச சைக்கிள் திட்டம் தொடங்கிவைப்பு 

  மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.