தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது - அமைச்சர் செந்தில் பாலாஜி

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | July 18, 2022, 18:57 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 10 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    18:52 (IST)

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது - அமைச்சர் செந்தில் பாலாஜி


    தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டுமென மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இல்லையேல் தமிழகத்திற்கு மத்திய அரசின் மானியம் தரமாட்டோம்; மத்திய அரசின் மின் திட்டங்கள் செயல்படுத்த மாட்டோம் என மத்திய எரிசக்தி துறை தொடர்ந்து 28 முறை கடிதம் எழுதியுள்ளது.

    இதனால், மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 100 யூனிட் வரை கட்டணத்தில் மாற்றமில்லை, 200 யூனிட்க்கு மேல் பயன்படுத்துவோருக்கு கட்டண உயர்கிறது.

    நுகர்வோர்களே 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகமாகிறது என அமைச்சர்  செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    18:17 (IST)

    ஆசிரியர்கள் டார்ச்சர் - கள்ளக்குறிச்சி மாணவி எழுதிய கடிதம் வெளியானது

    தான் சரியாக படிப்பதில்லை என ஆசிரியர்கள் டார்ச்சர் செய்ததாக மாணவி கடிதத்தில் குற்றச்சாட்டு.  தாய், தந்தை, சக மாணவர்களுக்கு  Sorry என சொல்லி கடிதத்தை முடித்துள்ளார்.

    17:54 (IST)

    குடியரசுத் தலைவர் தேர்தல் நிறைவு

    குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் நிறைவடைந்தது ; 99.18% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக, இத்தேர்தலுக்கான தலைமை தேர்தல் அதிகாரி பிசி மோடி தகவல்

    17:52 (IST)

    நீட் தேர்வு: மாணவிகளின் உள்ளாடைகளை களைய கட்டாயப்படுத்திய நீட் தேர்வு மைய கண்காணிப்பாளர்

    கேரளாவில் மாணவிகளின் உள்ளாடைகளை களைய கட்டாயப்படுத்தியதாக நீட் தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள், மாணவிகள் அளித்த புகாரின் பேரில் கொல்லம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

     
    17:52 (IST)

    நீட் தேர்வு: மாணவிகளின் உள்ளாடைகளை களைய கட்டாயப்படுத்திய நீட் தேர்வு மைய கண்காணிப்பாளர்

    கேரளாவில் மாணவிகளின் உள்ளாடைகளை களைய கட்டாயப்படுத்தியதாக நீட் தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள், மாணவிகள் அளித்த புகாரின் பேரில் கொல்லம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

     
    17:49 (IST)


    கள்ளக்குறிச்சி வன்முறை - இதுவரை 22 சிறார்கள் உள்ளிட்ட 278 பேர் கைது 

    கள்ளக்குறிச்சி வன்முறையில் ஈடுபட்டதாக  இதுவரை 22 சிறார்கள் உள்ளிட்ட 278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தவறு யார் செய்தாலும், இந்த அரசு அதை அனுமதிக்காது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் ஆய்வு செய்த பின் அமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வி.கணேசன் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் பேட்டி

    17:33 (IST)


    கள்ளக்குறிச்சி போராட்டத்தை காவல்துறை சிறப்பாக கையாண்டு உள்ளது - அமைச்சர் எ.வ.வேலு

    கள்ளக்குறிச்சி போராட்டத்தை காவல்துறை சிறப்பாக கையாண்டு உள்ளது, பள்ளிக்குள் இருந்த மாணவர்களுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளிதனர் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 

    17:20 (IST)


    அச்சிட்ட செய்தித்தாள் பேப்பரில் பஜ்ஜி, வடை வழங்க தடை!

    டீ கடைகளில் வடை, பஜ்ஜி உள்ளிட்ட உணவுப் பொருட்களை அச்சிட்ட செய்தித்தாள் பேப்பரில் வழங்க தடை விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். 

    16:31 (IST)

    கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி

    கேரளாவில் 2வது நபருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கேரளாவில் ஏற்கனவே ஒருவருக்கு குரங்கம்மை நோய் உறுதியான நிலையில் கன்னூரைச் சேர்ந்த மேலும் ஒருவருக்கு குரங்கம்மை இருப்பது உறுதியாகி உள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தகவல்

    முன்னதாக கடந்த வியாழன் அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பிய நபருக்கு நாட்டிலேயே முதல் முறையாக குரங்கம்மை நோய் தாக்குதல் கண்டறியப்பட்டது.

    15:41 (IST)

    தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக் வாபஸ்

    நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும்
    தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக் வாபஸ்

    பள்ளிக்கல்வித்துறையுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்  தீர்வு