அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்த உத்தரவை ரத்து செய்ய கோரி இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கு விசாரணை தொடங்கியது.
பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்தும் அங்கு வராமல் 300'க்கும் மேற்பட்டவர்களை கூட்டுக்கொண்டு ஒ.பி.எஸ் தலைமை அலுவலகம் சென்றதால் தான் பிரச்சினை ஏற்பட்டது.கதவுகளை உடைத்து அனைத்து கோப்புகளையும் எடுத்து சென்று விட்டனர்.
தொலைக்காட்சிகளில் வந்த நேரலைகளை பார்த்தாலே ஓ.பி.எஸ் ஆட்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தியது தெரியும். கல், கம்பு, இரும்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு தாக்கினர்.அங்கு போலீஸ் அதிகளவில் இருந்தாலும் அவர்கள் எந்த பாதுகாப்பும் வழங்கவில்லை. -இபிஎஸ் தரப்பு வாதம்