Tamil News Live : சென்னையில் இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்து சேதம்

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | December 15, 2022, 09:43 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    9:43 (IST)

    பழவந்தாங்கலில்  இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்து சேதம்

    சென்னை ஆலந்தூர் அடுத்த பழவந்தாங்கல் குமரன் தெரு சக்தி விநாயகர் கோவில் எதிரில் ராஜேஷ் மற்றும் காந்திமதி ஆக்யோருக்கு சொந்தமான இரண்டு கார்கள் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.இந்த நிலையில் இன்று அதிகாலை இரண்டு கார்களும் தீப்பிடித்து எரிவதாக அப்பகுதி மக்கள் கிண்டி தீயணைப்பு துறையினக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவலின் அடிப்படையில் இரண்டு தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு துறையினர் காரில் பற்றிய தீயை அரை மணிநேரம் போராடி அனைத்தனர் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

    8:20 (IST)

    திருவள்ளூர் பூண்டி சத்தியமூர்த்தி அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 2500 கன அடியாக குறைந்தது. 4000 கன அடி கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் 2000 கன அடியாக குறைக்கபடுகிறது

    6:11 (IST)

    ஃபைனலில் பிரான்ஸ்

    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மொராக்கோவை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு பிரான்ஸ் அணி முன்னேறியது.

    6:11 (IST)

    வணக்கம் வாசகர்களே..

    இன்று டிசம்பர் 15 ( வியாழக்கிழமை ) இன்றைய முக்கியச் செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்