காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அணையின் நீர்மட்டம் ஏற்கனவே 120 அடியாக உள்ளதால், வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்படி, வெளியேற்றப்படும் நீரின் அளவு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கனஅடியிலிருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் கனஅடியாக நேற்றிரவு அதிகரிக்கப்பட்டது. அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் மூலம் 23 ஆயிரம் கன அடி நீரும், 16 கண் பாலம் வழியாக ஒரு லட்சத்து 17 ஆயிரம் கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. இதையடுத்து, டெல்டா மாவட்டங்களுக்கு மத்திய நீர் ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.