டெல்லியில் ராகுல்காந்தி கைது

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

 • News18 Tamil
 • | August 05, 2022, 12:38 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 13 DAYS AGO

  AUTO-REFRESH

  HIGHLIGHTS

  12:38 (IST)

  டெல்லியில் ராகுல்காந்தி கைது

  டெல்லியில் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி உள்ளிட்டோர் கைது. விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற ராகுல்காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

  10:19 (IST)

  வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் உயர்வு

  வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.50 சதவிகிதம் உயர்ந்து 5.40 சதவீதமாக நிர்ணயம். நிதிக்கொள்கை கூட்டத்திற்கு பின் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு. 

  9:31 (IST)

  விசா முறைகேடு வழக்கு:  சென்னையில் அமலாக்கத்துறை சோதனை

  சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் சென்னையில் 6 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. 

  7:17 (IST)

  நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்  எஸ்.பி.அம்ரித் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மூன்றாம் நாளாக நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  6:36 (IST)

  வால்பாறை: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

  கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  6:34 (IST)


  வணக்கம் நேயர்களே..!
  இன்று ஆகஸ்ட் 05 (வெள்ளிக்கிழமை) இன்றைய முக்கியச் செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்