அதிமுக அலுவலக வழக்கு : ஓபிஎஸ் மேல்முறையீடு

Latest Tamil News: இன்றைய முக்கியச்செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

 • News18 Tamil
 • | August 04, 2022, 11:33 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 15 DAYS AGO

  AUTO-REFRESH

  11:33 (IST)

  அதிமுக அலுவலக வழக்கு : ஓபிஎஸ் மேல்முறையீடு

  அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ் வசம் ஒப்படைக்க  உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.

  7:26 (IST)

  தேனியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

   தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (4.8.2022) விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் முரளீதரன் அறிவிப்பு..

  7:3 (IST)

  கொடைக்கானலில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

  கனமழை காரணமாக கொடைக்கானல் மற்றும் சிறுமலையில்  உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்..

  6:36 (IST)

  நீலகிரி: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

  கனமழை காரணமாக நீலகிரியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உத்தரவை மீறி இயங்கும் பள்ளி, கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை. 

  6:14 (IST)

  ஓகேனக்கல் : காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு..!

  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 75 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரிப்பு. இன்று காலை 6 மணி  நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,75,000 கனடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை வினாடிக்கு 1,35,000 ஆயிரம் கன அடியாக இருந்து தண்ணீர் வரத்து தற்போது அதிகரித்துள்ளது.

  6:12 (IST)

  வணக்கம் நேயர்களே..!
  இன்று ஆகஸ்ட் 04 (வியாழக்கிழமை) இன்றைய முக்கியச் செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்