Tamil news Live Updates : தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

 • News18 Tamil
 • | October 03, 2022, 19:17 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 2 MONTHS AGO

  AUTO-REFRESH

  HIGHLIGHTS

  19:48 (IST)

  தமிழகம் முழுவதும் அதிரடி மாற்றம் : 199 பேருக்கு பதவி உயர்வு

  தமிழகம் முழுவதும் உதவி ஆய்வாளர்கள் 199 பேருக்கு காவல் ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கி பணியிட மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

  19:47 (IST)

  ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை ஒளிபரப்பவோ, பதிவிடவோ கூடாது -  மத்திய அரசு அறிவுறுத்தல்

  ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு செய்தி இணையதளங்கள், OTT தளங்கள், தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

  19:33 (IST)

  தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு

  முழுவிபரம்....https://tamil.news18.com/news/education/tamil-nadu-matriculation-school-quarterly-leave-upto-october-9th-announcement-812914.html


  19:17 (IST)

  தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு

  தமிழகத்தில் தனியார் மெட்ரிக் பள்ளிகள் வருகின்ற பத்தாம் தேதி திறக்கப்பட வேண்டும் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் அறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

  18:32 (IST)

  இல.கணேசன் உடல்நிலை சீராக உள்ளது : மணிப்பூர் அரசு தகவல

  முன்னாள் பாஜக மூத்த தலைவரும், மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநருமான இல.கணேசன் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மணிப்பூர் அரசு ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளது. 

  மேலும் வரும் புதன்கிழமையன்று கொரோனரி ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  15:11 (IST)

  மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

  2022 ஆம் ஆண்டிற்கான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடனை சேர்ந்த ஸ்வான்டே பாபோவுக்கு  அறிவிக்கப்பட்டது.  அழிந்துபோன ஹோமினின்கள் மற்றும் மனித பரிணாமத்தின் மரபணுக்கள் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்காக இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

  15:0 (IST)

  MBBS, BDS மாணவர் சேர்க்கை : கால அவசகாசம் நீட்டிப்பு

  மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிவடையவிருந்த நிலையில், வரும் 6-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டித்து  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  14:22 (IST)

  தமிழ்நாட்டை தூய்மையற்ற மாநிலமாக மாற்றிய திமுக அரசு - ஓபிஎஸ் சாடல்!


  தமிழ்நாட்டை தூய்மையற்ற மாநிலமாக தமிழக அரசு மாற்றிக் கொண்டிருப்பதாகவும், இதனால் இந்தியாவின் தூய்மை நகரங்களின் பட்டியலில் சென்னை 44வது இடத்தில் உள்ளதாகவும் தமிழக அரசை கண்டித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை விடுத்துள்ளார்..

  14:4 (IST)

  6 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் தேதி : இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

  மகாராஷ்டிரா, பீகார், ஒடிசா, தெலுங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய 6 மாநிலங்களில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  12:35 (IST)

  திருச்சியில் ஹீலியம் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் பலூன் வியாபாரி கைது

  திருச்சி சிங்காரத்தோப்பு அருகே உள்ள துணிக்கடை முன்பு  ஹீலியம் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மிகவும் ஆபத்தான நிலையில்  22 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த உத்தரபிரதேசம் மாநிலம், கன்னோஜ் மாவட்டம், பஹாசோரா பகுதியை சேர்ந்த  அனார் சிங் என்பவரை கோட்டை போலீசார் கைது செய்து உள்ளனர்.