ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுபவர்கள் இந்தியாவின் எதிரி - மு.க.ஸ்டாலின்
கேரளா மாநிலம் திருச்சூரில் நடைபெறும் மனோரமா நியூஸ் நடத்தும் கருத்தரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.
பல்வேறு மொழி பேசும் மக்கள் ஒற்றுமையாக வாழ மொழி வாரி மாநிலங்களை உருவாக்கி கொடுத்தவர் நேரு. இந்தி ஒருபோதும் திணிக்கப்படாது என்று உறுதிமொழி அளித்தார் ஜவஹர்லால் நேரு. இந்தியாவில் பல மொழி பேசும் மக்கள் உள்ளனர், பல கலாச்சாரம் கொண்ட மக்கள் உள்ளனர். ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுபவர்கள் இந்தியாவின் எதிரி என்று கூறினார்.
அரசுப்பேருந்து விபத்து - ஓட்டுநர், நடத்துனர் உயிரிழந்த பரிதாபம்
சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் சின்னார் அருகே முன்னால் சென்ற லாரி மீது பின்னால் வந்த அரசு பேருந்து மோதி விபத்து. இதில் அரசு பேருந்து ஓட்டுநர் தேவேந்திரன் நடத்தினர் முருகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பயணிகள் சிலர் காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.